ரூ.2 ஆயிரம் நோட்டு வடிவில் திருமண அழைப்பிதழ்சமூக வலைத்தளங்களில் வைரல்


ரூ.2 ஆயிரம் நோட்டு வடிவில் திருமண அழைப்பிதழ்சமூக வலைத்தளங்களில் வைரல்
x
தினத்தந்தி 22 May 2023 12:15 AM IST (Updated: 22 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ரூ.2 ஆயிரம் நோட்டு வடிவில் திருமண அழைப்பிதழ் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பெங்களூரு-

ரூ.2 ஆயிரம் நோட்டு வடிவில் திருமண அழைப்பிதழ் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரூ.2 ஆயிரம் நோட்டு

மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி உயர் மதிப்பு கொண்ட ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை ரத்து செய்தது. மேலும் ரூ.2 ஆயிரம் மற்றும் புதிய ரூ.500 நோட்டுகளை அறிமுகம் செய்தது. இதையடுத்து சாமானிய மக்கள் தங்களிடம் இருந்த ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை வங்கிகளில் மாற்ற கடும் அவதி அடைந்தனர். அவர்கள் கால்கடுக்க நின்று அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிய கஷ்டம் இன்றும் நம் நினைவில் இருந்து அகலவில்லை என்பது நிசர்தணமான உண்மை.

இந்த நிலையில் தற்போது மத்திய அரசு ரூ.2 ஆயிரம் நோட்டுகளையும் ரத்து செய்துள்ளது. அதற்கு மாற்றாக இதுவரை உயர் மதிப்பு கொண்ட வேற எந்த ரூபாய் நோட்டுகளையும் மத்திய அரசு அறிமுகம் செய்யவில்லை. தற்போதுள்ள சூழ்நிலையில் ரூ.500 தான் உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டாக புழக்கத்தில் உள்ளது.

திருமண பத்திரிகை

இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஒரு புதுமண ஜோடி தங்கள் திருமணத்திற்காக 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வடிவில் பத்திரிகை அச்சிட்டு வெளியிட்டது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. அந்த பத்திரிகை முழுக்க, முழுக்க 2 ஆயிரம் ருபாய் நோட்டு வடிவிலேயே இருந்தது.

ரூபாய் நோட்டில் அதன் முகமதிப்பு அச்சிடப்பட்டு இருப்பது போலவே திருமணம் நடைபெற்ற ஆண்டு, ரூபாய் நோட்டுக்கான எண் வடிவில் திருமண தேதி, ரிசர்வ் வங்கியின் பெயர் அச்சிடப்பட்டு இருக்கும் இடத்தில் 'லவ் பேங் ஆப் லைப்' என்றும், ரூபாய் நோட்டில் இடம்பெற்று இருக்கும் பிற அம்சங்களைப் போல் திருமண தகவல்களை அச்சிட்டும் இருந்தனர்.

சமூக வலைத்தளங்களில் வைரல்

மேலும் காந்தி புகைப்படம் இடம்பெற்று இருக்கும் இடத்தில் விநாயகர், புதுமண தம்பதியை ஆசீர்வதிப்பது போன்றும் அச்சிட்டு இருந்தன. மேலும் அதில் ஒரு கியூ-ஆர் கோடையும் அச்சிட்டு இருந்தனர். அதை ஸ்கேன் செய்தால் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து திருமணம் நடைபெறும் மண்டபத்திற்கு செல்வதற்கான வழியை கூகுள் மேப் காட்டிவிடும்.

அந்த அளவிற்கு அழகாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும், வித்தியாசமாகவும் வடிவமைக்கப்பட்ட இந்த பத்திரிகையை வடிவமைத்த மணமகன் தேஜு சிக்கமகளூரு மாவட்டம் கலசா தாலுகாவைச் சேர்ந்தவர் ஆவார். மேலும் அவர் இந்த பத்திரிகையை உடுப்பியில் உள்ள தனது நண்பர் மூலமாக டிசைன் செய்து அச்சிட்டு இருக்கிறார். தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு ரத்து செய்துள்ள நிலையில் தேஜுவின் திருமண பத்திரிகை சமூக வலைத்தளங்களில் வைரலாகி காண்போரை வியக்க வைக்கிறது.


Next Story