மேற்கு வங்காளம்: பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் கிடந்த பெரிய பாம்பு


மேற்கு வங்காளம்: பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் கிடந்த பெரிய பாம்பு
x

மேற்கு வங்காளத்தில் பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் பெரிய பாம்பு கிடந்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.



பீர்பும்,


மேற்கு வங்காளத்தின் பீர்பும் மாவட்டத்தில் மயூரேஸ்வர் பகுதியில் உள்ள முதன்மை நிலை பள்ளி ஒன்றில் படித்து வரும் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு உள்ளது.

அதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில், மாணவர்கள் வாந்தி எடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து 30 மாணவர்கள் வரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களுக்கு வழங்கிய உணவில் பெரிய பாம்பு ஒன்று கிடந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனால், அவர்கள் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. சிகிச்சைக்கு பின் அவர்கள் நலமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஒரேயொரு மாணவர் சிகிச்சை பெற்று வருகிறார். எனினும், நலமுடனேயே உள்ளார். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், பள்ளிக்கு நேரில் சென்ற பெற்றோர் தலைமை ஆசிரியரின் இரு சக்கர வாகனம் மீது தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Next Story