ஹாவேரி தாசில்தாரின் கதி என்ன?
வீட்டில் இருந்து வெளியே சென்ற கணவனை 3 நாட்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை என்று ஹாவேரி தாசில்தாரின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஹாவேரி-
ஹாவேரி தாசில்தாராக பணியாற்றி வந்தவர் கிரீஷ். இவர் பெலகாவியை சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில் கடந்த மாதம் 31-ந் தேதி இரவு பெலகாவியில் இருந்து தனது மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு கிரீஷ் பேசினார். அப்போது நான் இரவு வீட்டிற்கு வர மாட்டேன். ஹனகல் ரோட்டில் உள்ள ரெசார்டில் தங்க உள்ளேன் என்று கூறி இருந்தார். அதன்பின்னர் கிரீசை அவரது மனைவியால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
கிரீஷ் கூறிய ரெசார்ட்டிற்கு சென்று அவரது மனைவி விசாரித்த போது கடந்த 1-ந் தேதி காலை 5 மணிக்கு கிரீஷ் அறையை காலி செய்துவிட்டு சென்றதாக கூறினர். அதன்பின்னர் அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? அவரது கதி என்ன? என்பது தெரியவில்லை. கிரீஷ் மாயமானது குறித்து அவரது மனைவி ஹாவேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
Related Tags :
Next Story