குஜராத் மாநிலத்தில் போதை பொருள் விற்கும் மாபியாக்களை எந்த ஆளும் சக்தி பாதுகாக்கிறது ? - ராகுல் காந்தி கேள்வி
இந்த மாபியாக்களுக்கு எந்த ஆளும் சக்திகள் பாதுகாப்பு கொடுக்கிறார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதனால் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி 42 பேர் உயிரிழந்தனர்.97 பேர் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;
குஜராத்தில் பல கோடி மதிப்புள்ள போதைப்பொருள்களும் அங்கு தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன,, கண்மூடித்தனமாக போதைப்பொருள் வியாபாரம் செய்யும் இவர்கள் யார்? இந்த மாபியாக்களுக்கு எந்த ஆளும் சக்திகள் பாதுகாப்பு கொடுக்கிறார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.