உப்பள்ளியில் நடந்து சென்ற போது கார் மோதி தூக்கிவீசப்பட்ட சிறுவன் லாரியில் சிக்கி பலி
உப்பள்ளி அருகே நடந்து சென்ற போது கார் மோதியதில் தூக்கிவீசப்பட்ட சிறுவன், லாரியில் சிக்கி பலியானான்.
உப்பள்ளி-
உப்பள்ளி அருகே நடந்து சென்ற போது கார் மோதியதில் தூக்கிவீசப்பட்ட சிறுவன், லாரியில் சிக்கி பலியானான்.
கார், லாரி மோதல்
தார்வார் மாவட்டம் உப்பள்ளியை அடுத்த கேஷ்வாப்பூரை சேர்ந்தவர் ருத்ரவ் ஜெயின் (வயது 17). நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் இவர் விளையாடிவிட்டு, உன்கல் பகுதியில் உள்ள பாட்டி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று சிறுவன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் சாலையின் நடுவே விழுந்தார்.
அப்போது அதே சாலையில் வந்த லாரி ஒன்று சிறுவன் மீது ஏறியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் லாரியை மடக்கி பிடிக்க முயற்சித்தனர். ஆனால் லாரி நிற்காமல் சென்றுவிட்டது. இதையடுத்து இந்த விபத்து குறித்து அவர்கள் வித்யாநகர் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் விசாரணை
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது லாரி மற்றும் கார் குறித்த விவரங்கள் போலீசாருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது.
அதை வைத்து போலீசார் கார் மற்றும் லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இந்தநிலையில் இந்த விபத்து குறித்து வித்யாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.