சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதி யார்? பெயரை சிபாரிசு செய்யும்படி யு.யு.லலித்துக்கு மத்திய அரசு கடிதம்


சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதி யார்?  பெயரை சிபாரிசு செய்யும்படி யு.யு.லலித்துக்கு மத்திய அரசு கடிதம்
x
தினத்தந்தி 8 Oct 2022 4:00 AM IST (Updated: 8 Oct 2022 4:01 AM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 65 வயது வரையும், ஐகோர்ட்டு நீதிபதிகள் 62 வயது வரையும் பதவி வகிக்கலாம்

புதுடெல்லி, அக்.8-

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 65 வயது வரையும், ஐகோர்ட்டு நீதிபதிகள் 62 வயது வரையும் பதவி வகிக்கலாம். தற்போது, சுப்ரீம் கோர்ட்டு தலைைம நீதிபதியாக யு.யு.லலித் பதவி வகித்து வருகிறார். அவர் நவம்பர் 8-ந்தேதி ஓய்வு பெறுகிறார். அவர் வெறும் 74 நாட்கள் மட்டுமே இப்பதவியில் இருப்பார்.

இதையடுத்து, அடுத்த தலைமை நீதிபதியை தேர்வு செய்யும்

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 65 வயது வரையும், ஐகோர்ட்டு நீதிபதிகள் 62 வயது வரையும் பதவி வகிக்கலாம் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. வழக்கமான நடைமுறைப்படி, அடுத்த தலைமை நீதிபதி பெயரை சிபாரிசு செய்யுமாறு தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு மத்திய சட்ட மந்திரி நேற்று கடிதம் அனுப்பினார். இந்த தகவலை மத்திய சட்ட அமைச்சகம் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் தெரிவித்துள்ளது. ஓய்வுபெற உள்ள தலைமை நீதிபதி, தனக்கு அடுத்த இடத்தில் உள்ள மிக மூத்த நீதிபதியை தலைமை நீதிபதி பொறுப்புக்கு சிபாரிசு செய்வது வழக்கம். அந்த அடிப்படையில், மிக மூத்த நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட், அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. அவர் நவம்பர் 9-ந் தேதி, நாட்டின் 50-வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு, அதாவது 2024-ம் ஆண்டு நவம்பர் 10-ந் தேதிவரை அப்பொறுப்பில் இருப்பார்.


Next Story