யார் மனு கொடுத்தாலும் ஏற்க வேண்டும்- மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி பேட்டி


யார் மனு கொடுத்தாலும் ஏற்க வேண்டும்-  மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி பேட்டி
x

யார் மனு கொடுத்தாலும் ஏற்க வேண்டும் என்று மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூருவில் கனமழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டு சில பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்ற முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். நகரின் வளர்ச்சிக்கு அரசு ரூ.8 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இது மட்டுமின்றி இன்னும் கூடுதல் நிதியை ஒதுக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வெள்ள பிரச்சினையை முதல்-மந்திரி தீவிரமாக எடுத்து கொண்டுள்ளார். மனு கொடுக்க வந்த பெண்ணை அரவிந்த் லிம்பாவளி எம்.எல்.ஏ. திட்டியதாக தகவல் அறிந்தேன். யார் மனு கொடுக்க வந்தாலும் அதை ஏற்க வேண்டும். அவர் மூத்த எம்.எல்.ஏ.. மக்கள் பிரச்சினைகள் குறித்து அவருக்கு நன்கு தெரியும். இந்த விவகாரம் குறித்த உண்மை நிலையை அறிந்து நான் கருத்து கூறுகிறேன்.

இவ்வாறு பிரகலாத்ஜோஷி கூறினார்.


Next Story