ராபர்ட்சன்பேட்டையில் சாலை விரிவாக்க பணிக்கு கட்டிடங்களை இடிக்காதது ஏன்?


ராபர்ட்சன்பேட்டையில் சாலை விரிவாக்க பணிக்கு கட்டிடங்களை இடிக்காதது ஏன்?
x
தினத்தந்தி 22 Sept 2022 12:15 AM IST (Updated: 22 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராபர்ட்சன்பேட்டையில் சாலை விரிவாக்க பணிக்கு கட்டிடங்களை இடிக்காதது ஏன்? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கோலார் தங்கவயல்:

கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டையில் சாலைகளை விரிவாக்கம் செய்ய சாலையின் இருபுறங்களிலும் உள்ள கட்டிடங்கள் இடித்து தள்ளப்பட்டன. அதில் அசோக் நகர் சாலையோரம் உள்ள கட்டிடங்கள் இரவோடு இரவாக இடித்து அகற்றப்பட்டன. சில மாதங்களுக்கு முன் ராபர்ட்சன்பேட்டையில் சில பகுதிகளில் கட்டிடங்களை நகரசபை அதிகாரிகள் பொக்லைன் எந்திரங்களை கொண்டு இடித்துத் தள்ளினார்கள்.

ஆனால், ராபர்ட்சன்பேட்டை நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் சாலையில் உள்ள அரசு மகப்பேறு ஆஸ்பத்திரி அருகே உள்ள வணிக வளாக கட்டிடங்கள், தனியாருக்கு சொந்தமான கட்டிடங்கள் அரசு பொது மருத்துவமனை எதிரே உள்ள கட்டிடங்கள் நடைபாதை இன்றி கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்களை இடித்து சாலையை விரிவாக்கம் செய்ய நகரசபை நிர்வாகமோ, பொதுப்பணித்துறை நிர்வாகமோ, தாசில்தாரோ ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.


Next Story