ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் புகைப்படத்தை ஏன் அச்சிடக்கூடாது - காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி கேள்வி


ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் புகைப்படத்தை ஏன் அச்சிடக்கூடாது  - காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி  கேள்வி
x

ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் புகைப்படத்தை ஏன் அச்சிடக்கூடாது என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தி உருவமும், மற்றொரு புறம் பெண் கடவுள் லட்சுமி மற்றும் கடவுள் விநாயகர் படங்கள் இடம்பெற வேண்டும் என டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தெரிவித்தார்.

இதற்கிடையில், மராட்டிய பாஜக எம்எல்ஏ ராம் கதம் என்பவர் 'பிரதமர் மோடியின் படமும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற வேண்டும்' என கூறினார்.

இந்நிலையில், ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் காந்தி படமும், மறுபக்கம் அம்பேத்கர் படத்தையும் அச்சிட வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில்,

புதிதாக அச்சடிக்கப்படவுள்ள இந்திய ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் புகைப்படத்தை ஏன் அச்சிடக்கூடாது? ஒருபுறம் காந்தியும், மறுபுறம் அம்பேத்கரின் புகைப்படமும் அச்சிட வேண்டும். சமத்துவம் பற்றி பேசிய நவீன இந்தியாவின் ஆளுமை அம்பேத்கர், அவர் படத்தை ஏன் ரூபாய் நோட்டுகளில் அச்சிடக்கூடாது என கேள்வி எழுப்பி உள்ளார்.


Next Story