நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் ஏன் ? - நிகழ்ச்சி நிரல் வெளியானது


நாடாளுமன்ற  சிறப்பு கூட்டத் தொடர் ஏன் ?  - நிகழ்ச்சி நிரல் வெளியானது
x
தினத்தந்தி 13 Sep 2023 4:06 PM GMT (Updated: 13 Sep 2023 4:38 PM GMT)

சிறப்பு கூட்டத் தொடர் நிகழ்ச்சி நிரல் குறித்து நாடாளுமன்ற அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.செப்டம்பர் 18 -ம் தேதி முதல் 22 -ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி அறிவித்தார். ஆனால், சிறப்பு கூட்டத்துக்கான நோக்கம் குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. இதனிடையே, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் முதல் நாளில் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கும். அதற்கு அடுத்தக் கூட்டங்கள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு மாற்றப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நிகழ்ச்சி நிரல் குறித்து நாடாளுமன்ற அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால பயணம் குறித்த அனுபவத்தை பகிருவதற்காக இந்த சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறுகிறது.நாடாளுமன்றத்தின் வரலாறு குறித்த கருத்துக்களை எம்.பிக்கள் பகிரலாம் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்விதான் சபா தொடங்கி , பிற சாதனைகள் அனுபவங்கள் ,நினைவுகள் ஆகியவற்றை பகிரலாம் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story