உத்தரபிரதேச முதல்-மந்திரியுடன் பசவராஜ் பொம்மை தொலைபேசியில் பேச்சு


உத்தரபிரதேச முதல்-மந்திரியுடன் பசவராஜ் பொம்மை தொலைபேசியில் பேச்சு
x

விபத்தில் கன்னடர்கள் 7 பேர் பலியானது குறித்து உத்தரபிரதேச முதல்-மந்திரியுடன் பசவராஜ் பொம்மை தொலைபேசியில் பேசினார்

பெங்களூரு: உத்திரபிரதேசத்திற்கு கர்நாடகம் மாநிலம் பீதரை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் ஆன்மிக சுற்றுலா சென்றனர். அங்கு நடந்த சாலை விபத்தில் 7 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, விபத்தால் பாதிக்கப்பட்ட கன்னடர்களுக்கு தேவையான உதவியும், காயம் அடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சையும் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொண்டார்.


மேலும் இறந்தவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டுவர தேவையான உதவிகள் செய்யப்படுவதாகவும் பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story