மங்களூரு அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை


மங்களூரு அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 14 April 2023 6:45 PM GMT (Updated: 14 April 2023 6:45 PM GMT)

மங்களூரு அருகே செல்போன் பயன்படுத்துவதை கணவர் கண்டித்ததால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்ட பண்ட்வால் தாலுகா புஞ்சலகட்டே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நயநாடு கிராமம் பெஞ்சிநாடுகா பகுதியில் வசித்து வந்தவர் ஜெயலட்சுமி (வயது 35). இவரது கணவர் ஹரிபிரசாத். இவர்களுக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் ஜெயலட்சுமி செல்போனை பயன்படுத்துவதிலேயே அதிக நேரத்தை செலவிட்டு வந்தார். இதுபற்றி ஹரிபிரசாத் அறிவுரை வழங்கியும் ஜெயலட்சுமி கேட்கவில்லை.

இதனால் ஹரிபிரசாத், ஜெயலட்சுமியை கடிந்து கொண்டார். இதனால் மனமுடைந்த ஜெயலட்சுமி தனது வீட்டின் அருகே உள்ள மாட்டு கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி புஞ்சலகட்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story