குடும்ப தகராறில், குழந்தையுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை


குடும்ப தகராறில், குழந்தையுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
x

பங்காருபேட்டையில் கும்பத்தகராறு காரணமாக குழந்தையுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் அந்த பெண்ணின் கணவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

கோலார்: பங்காருபேட்டையில் கும்பத்தகராறு காரணமாக குழந்தையுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் அந்த பெண்ணின் கணவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

குடும்ப தகராறு

கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா சோலிகுண்டே கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர். விவசாயியான இவரது மனைவி கீர்த்தனா(வயது 23). இவர்களுக்கு 1½ வயதில் யோகஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை கணவன் மனைவிக்கு இடைய வழக்கம் போல் தகராறு நடந்துள்ளது.

இதில் கோபம் அடைந்த கீர்த்தனா வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு தனது 1½ வயது கை குழந்தையுடன் சென்றுள்ளார். ஆனால், அவர் அதன்பிறகு வீடு திரும்பவிலலை.

பெண் தற்கொலை

இதனால், அதிர்ச்சி அடைந்த சுதாகர் ஊர் முழுக்க மனைவியை தேடினார். ஆனால், கீர்த்தனா எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை கீர்த்தனா மற்றும் 1½ வயது குழந்தை இருவரும் கிராமத்தை அடுத்துள்ள கிணற்றில் பிணமாக மிதப்பதை சிலர் பார்த்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பங்காருபேட்டை புறநகர் போலீசார் விரைந்து வந்து ஆய்வு செய்தனர். பின்னர், கிராம மக்களின் உதவியுடன் கீர்த்தனா மற்றும் குழுந்தையின் உடல்களை கிணற்றில் இருந்து மீட்டனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கணவன் கைது

இந்த நிலையில் உயிரிழந்த கீர்த்தனாவின் பெற்றோர் வரதட்சணை கேட்டு சுதாகர் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கீர்த்தனா கை குழுந்தையுடன் தற்கொலை செய்து கொண்டார் என்றும், தனது மகளின் சாவுக்கு காரணமான சுதாகர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனு அளித்தனர். அதன் பேரில் பங்காருபேட்டை புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுதாகரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story