கணவரின் கள்ளத்தொடர்பால் குழந்தைகளுடன் பெண் தற்கொலை


கணவரின் கள்ளத்தொடர்பால் குழந்தைகளுடன் பெண் தற்கொலை
x

3 குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவரின் கள்ளத்தொடர்பால் தற்கொலை செய்தது அம்பலமாகி உள்ளது.

பெங்களூரு-

கொலை-தற்கொலை

விஜயாப்புரா மாவட்டம் திகோடா தாலுகா ஜாலகேரி கிராமத்தை சேர்ந்தவர் ராமு சவுகான். இவரது மனைவி கீதா (வயது 32). இந்த தம்பதிக்கு சிருஷ்டி (6), சமர்தா (4) மற்றும் கிஷன் (3) என்ற பிள்ளைகள் இருந்தனர். இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் 2 தினங்களுக்கு முன்பு கீதா, தனது 3 பிள்ளைகளையும் வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்றார். இதையடுத்து அவரும் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திகோடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கணவரின் கள்ளத்தொடர்பு

இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், கணவரின் கள்ளத்தொடர்பு காரணமாக கீதா, 3 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்தது தெரியவந்தது. அதாவது, ராமு சவுகானின் சகோதரர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதையடுத்து அவரது மனைவி மாலாவுடன் ராமு சவுகானுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கீதாவுக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து கள்ளக்காதலை கைவிடுமாறு கீதா கூறி உள்ளார். ஆனால் அதற்கு ராமு சவுகான் மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த கீதா, 3 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் ராமு சவுகானை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ராமு சவுகானின் அண்ணியை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story