பெண்ணை கொன்று ஏரியில் உடல் வீச்சு


பெண்ணை கொன்று ஏரியில் உடல் வீச்சு
x

துமகூரு அருகே குடும்ப பிரச்சினையில் பெண்ணை கொன்று உடலை ஏரியில் வீசிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு:-

ஏரியில் பெண் உடல்

துமகூரு மாவட்டம் துருவகெரே அருகே மாயசந்திரா தொட்டி பகுதியில் உள்ள ஏரியில் ஒரு இளம்பெண் பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி துருவகெரே போலீசார் விசாரித்தனர். முதலில் அவர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியாமல் இருந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அவரது பெயர் தர்ஷினி வயது 26) என்பதும், அவரை கொலை செய்துவிட்டு, உடலை ஏரியில் வீசி இருப்பதும் தெரியவந்தது.

மேலும் பெங்களூரு எலகங்காவில் வசிக்கும் வினயின் மனைவி தான் தர்ஷினி என்பதையும் போலீசார் உறுதி செய்தார்கள். அதே நேரத்தில் தர்ஷினியை, அவரது கணவர் வினய் கொலை செய்து, உடலை ஏரியில் வீசி இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்தது. இதுகுறித்து துருவகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

கணவர் கைது

மேலும் சந்தேகத்தின் பேரில் வினயை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது வினய், தர்ஷினி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் வினயுடன், தர்ஷினி அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த வினய் தனது மனைவி தர்ஷினியை அடித்து, உதைத்து தாக்கியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தது தெரியவந்தது.

பின்னர் தர்ஷினியின் உடலை மாயசந்திராவில் உள்ள ஏரிக்கு கொண்டு சென்று வினய் வீசிவிட்டு, யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வண்ணம் இருந்துள்ளார். இதையடுத்து, வினயை போலீசார் கைது செய்தார்கள். அவர் மீது துருவகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story