அழகு நிலைய பெண் உரிமையாளரை கொன்று உடல் எரிப்பு; 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை


அழகு நிலைய பெண் உரிமையாளரை கொன்று உடல் எரிப்பு; 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை
x

கோலார் அருகே அழகு நிலைய பெண் உரிமையாளரை கொன்று உடல் எரிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

பெங்களூரு:

அழகு நிலைய பெண் உரிமையாளர்

கோலார் (மாவட்டம்) தாலுகா முதுவாடி அருகே தொண்டல் கிராமத்தில் உள்ள ஏரிக்கரை பகுதியில் பாதியளவு உடல் எரிந்த நிலையில் ஒரு பெண் பிணம் கிடப்பதாக கோலார் புறநகர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை கைப்பற்றினர். மேலும் அவரது கழுத்தில் கிடந்த தாலிச்சங்கிலியையும் கைப்பற்றினர். பின்னர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதாவது உடல் எரிந்த நிலையில் கிடந்தது சீனிவாசப்புரா பகுதியைச் சேர்ந்த ஷோபா(வயது 37) என்பதும், அவர் அப்பகுதியில் சொந்தமான அழகு நிலையம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.

3 பேரிடம் விசாரணை

மேலும் இவர் சமீபத்தில் தான் வெங்கடரமணா என்பவரை திருமணம் செய்து இருந்தார். வெங்கடரமணாவுக்கு இது 2-வது திருமணம் ஆகும். இந்த நிலையில் குடும்பத்துடன் வசித்து வந்த ஷோபவை யாரோ மர்ம நபர்கள் கொன்று உடலை ஏரிக்கரை பகுதியில் கொண்டு வந்து எரித்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

ஆனால் ஷோபாவை கொலை செய்தவர்கள் யார்?, எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது ஷோபாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story