லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது: பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான பெண் உதவி சப்-இன்ஸ்பெக்டரை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் தயானந்த் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு:
லோக் அயுக்தா
பெங்களூரு சிவாஜிநகர் போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக சுமா அமந்தா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவர் கடந்த வாரம் வழக்கு விசாரணைக்காக வந்தவரிடம், வழக்கை முடித்து கொடுப்பதற்கு லஞ்சம் கேட்டுள்ளார். அப்போது அந்த நபரும், சுமா கூறியபடி ரூ.5 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார். முன்னதாக அவர் இதுகுறித்து லோக் அயுக்தாவில் புகார் அளித்தார்.
அந்த புகாரின்பேரில் லோக் அயுக்தா போலீசார், சுமா அமந்தா உள்பட 4 போலீசாரை கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். தற்போது அவர்களிடம் லோக் அயுக்தா போலீசார் லஞ்சம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் லஞ்சம் பெற்ற வழக்கில் தொடர்புடைய உதவி சப்-இன்ஸ்பெக்டர் சுமாவை பணி இடைநீக்கம் செய்து மாநகர போலீஸ் போலீஸ் கமிஷனர் தயானந்த் உத்தரவிட்டுள்ளார்.
விசாரணை
மலும், வழக்கை முடித்து வைப்பதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் தொடர்புடைய உதவி சப்-இன்ஸ்பெக்டரை பணி இடைநீக்கம் செய்வதாகவும், அவர் மீது துறை சார்ந்த விசாரணை நடத்தப்படும் எனவும் கமிஷனர் தயானந்த் உத்தரவிட்டார்.
சுமா, வழக்கு தொடர்பாக பலரிடம் பணம் பெற்று இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக லோக் அயுக்தா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.