வயநாடு சென்ற ராகுல் காந்தியின் கன்னங்களை அன்புடன் தொட்டு அன்பை பொழிந்த மூதாட்டி! வைரல் வீடியோ
இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாட்டில் தாக்குதலுக்குள்ளான தன் அலுவலகத்தைப் பார்வையிட்டு கட்சியினருடன் உரையாடினார்.
திருவனந்தபுரம்,
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளம் மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு எம்.பியானார். வயநாட்டில் உள்ள ராகுல் காந்தி அலுவலகத்தை கடந்த 24 ஆம் தேதி அடித்து நொறுக்கினர்.
இந்நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாட்டில் தாக்குதலுக்குள்ளான தன் அலுவலகத்தைப் பார்வையிட்டு கட்சியினருடன் உரையாடினார்.
அப்போது அவரை காண்பதற்காக, நடக்க முடியாத நிலையில் ஒரு மூதாட்டி காத்திருந்து பார்த்தார். அந்தப் பெண், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் கன்னங்களை அன்புடன் தொட்டு அன்பை பொழியும் காட்சி இணையத்தில் அதிகம் பகிரப்படு வருகிறது.
Related Tags :
Next Story