பாடி பில்ட்டிங் போட்டி: அனுமான் சிலை முன் பிகினி உடையில் பெண்கள் பா.ஜ.க மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

பாடி பில்ட்டிங் போட்டி: அனுமான் சிலை முன் பிகினி உடையில் பெண்கள் பா.ஜ.க மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
x

பாடி பில்டிங் போட்டியில் மேடையில் ஹனுமான் சிலை இருப்பதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிகச்சி ஆபாசமான என்று குற்றஞ்சாட்டியது.

ரத்லம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள ரத்லமில் 13 வது ஜூனியர் பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்திய பாடிபில்டிங் பெடரேஷனின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து 400க்கும் மேற்பட்ட பாடி பில்டர்கள் கலந்து கொண்டனர்.

பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் போட்டியின்போது மேடையில் அனுமான் சிலை வைக்கப்பட்டு இருந்தது. அதன்முன் குறைந்த ஆடை அணிந்த பெண்கள் தங்கள் உடலை முறுக்கி காட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. இது தொடர்பாக ஆளும் பாஜக மீது காங்கிரஸ் தாக்குதல் நடத்தியது.

தற்போது வைரலாகி வரும் வீடியோவில், பிகினி அணிந்த இளம் பெண் பாடி பில்டர்கள் தங்கள் தடகள உடலை முறுக்கி காட்டுவதை காணலாம். மேடையின் மீது அனுமான் சிலை நிறுவப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச உயர்கல்வித்துறை மந்திரி மோகன் யாதவ், ரத்லாம் பாஜக எம்எல்ஏ சேத்தன் காஷ்யப் மற்றும் அந்த கட்சியைச் சேர்ந்த மேயர் பிரஹலாத் படேல் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை சனிக்கிழமை தொடங்கி வைத்தனர்.

பாடி பில்டிங் போட்டியில் மேடையில் ஹனுமான் சிலை இருப்பதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிகச்சி ஆபாசமான என்று குற்றஞ்சாட்டியது.

Next Story