கர்நாடக ஐகோர்ட்டு வளாகத்தில் தொழுகை செய்த பெண்கள்


கர்நாடக ஐகோர்ட்டு வளாகத்தில் தொழுகை செய்த பெண்கள்
x

கர்நாடக ஐகோர்ட்டு வளாகத்தில் தொழுகை செய்த பெண்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட செய்திகள்

பெங்களூரு:

கர்நாடக அரசின் அதிகார மையமான பெங்களூரு விதான சவுதா எதிரே கர்நாடக ஐகோர்ட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி கர்நாடக 'ஐகோர்ட்னல்லி நமாஸ்' என்ற தலைப்பில் ஒரு வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் கர்நாடக ஐகோர்ட்டு வளாகத்தில் 2 பெண்கள் தொழுகை செய்யும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இந்த வீடியோ வைரலான நிலையில் பெங்களூரு விதான சவுதா போலீஸ் நிலையத்தில் ஐகோர்ட்டு பொறுப்பு பதிவாளர் (நிர்வாகம்) ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கர்நாடக ஐகோர்ட்டு வளாகத்தில் அனுமதியின்றி புகுந்து 2 பெண்கள் தொழுகை செய்வது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ 2 மத மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த வீடியோவை வெளியிட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அந்த புகாரின்பேரில் 447 (குற்றவியல் அத்துமீறல்), 505- (2) (பகையை உருவாக்குதல்) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story