காற்று மாசு எதிரொலி: முடிந்தவரை வீட்டில் இருந்து பணிபுரியுங்கள் - டெல்லி சுகாதாரத்துறை வேண்டுகோள்


காற்று மாசு எதிரொலி:  முடிந்தவரை வீட்டில் இருந்து பணிபுரியுங்கள் - டெல்லி சுகாதாரத்துறை வேண்டுகோள்
x
தினத்தந்தி 2 Nov 2022 10:31 AM GMT (Updated: 2 Nov 2022 10:32 AM GMT)

வாகன மாசுபாட்டை குறைக்க முடிந்தவரை வீட்டில் இருந்துபணிபுரியுங்கள் என டெல்லி சுகாதாரத்துறை மந்திரி கோபால் ராய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் சமீப நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில், காற்றின் தரத்தை மேம்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

டெல்லியில் காற்று மாசை குறைக்க, மாநில அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், காற்று மாசால் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இது தொடர்பாக தேசிய குழந்தைகளுக்கான உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. டெல்லியை பொறுத்தவரை, இன்று பதிவாகியுள்ள காற்று மாசின் அளவீட்டில் என்சிஆர் பகுதியில் காற்றின் தரக் குறியீடு அளவு 406 என உள்ளது. இதனால் டெல்லி, காற்று மாசு அளவீடுகளில் 039 கடுமையான பிரிவில் உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சுற்றுச்சூழல் மந்திரி கோபால் ராய், வாகன மாசுபாட்டை குறைக்க முடிந்தவரை வீட்டில் இருந்து பணிபுரியுங்கள் என தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story