15 வார்டுகளில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரம்


15 வார்டுகளில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 26 Oct 2022 12:15 AM IST (Updated: 26 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு மாநகராட்சியில் 15 வார்டுகளில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

பெங்களூரு:

பெங்களூரு மாநகராட்சியின் வார்டுகள் 198-ல் இருந்து 243 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் வசிக்கும் மக்களுக்கும் உரிய சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மாநகராட்சியின் 58 வார்டுகளில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ராஜராஜேசுவரிநகர், மகாதேவபுரா, தாசரஹள்ளி மற்றும் மேற்கு மண்டலங்களில் உள்ள 15 வார்டுகளில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த 15 வார்டுகளிலும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கட்டிடங்கள் கட்டுவதற்காக ரூ.11 கோடியை மாநகராட்சியை ஒதுக்கீடு செய்திருக்கிறது. மீதமுள்ள 43 வார்டுகளில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களை சீரமைத்து ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.9.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தாலும், 243 வார்டுகளிலும் நம்ம கிளினிக் அமைக்கவும் மாநகாட்சி நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story