மாமனாரை தாக்கிய தொழிலாளி கைது


மாமனாரை தாக்கிய தொழிலாளி கைது
x

மகளை கொடுமைப்படுத்தியதை கண்டித்த மாமனாரை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு:-

ஆந்திராவை சேர்ந்த...

பெங்களூரு புறநகர் ஒசகோட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன். தொழிலாளி. இவருக்கும் ஆந்திராவை சேர்ந்த பவானி என்ற பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மோகன், வரதட்சணை வாங்கி வரும்படி கூறி தனது மனைவியை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் பவானி மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் அவர் சம்பவத்தன்றும், தனது மனைவியை வரதட்சணை வாங்கி வருமாறு கூறி தாக்கி உள்ளார். ஆனால் அதற்கு பவானி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மோகன், பவானியை சரமாரியாக தாக்கி உள்ளார். இதையடுத்து இதுகுறித்து பவானி தனது பெற்றோர், உறவினரிடம் கூறி உள்ளார். அதன்பேரில் அவர்கள் மோகன் வீட்டிற்கு வந்துள்ளனர்.

வழக்குப்பதிவு

பின்னர், அதுகுறித்து கேட்டனர். அப்போது மோகனுக்கும், பவானியின் தந்தைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் மோகன், மாமனார் என்றும் பார்க்காமல், பவானியின் தந்தை உள்பட குடும்பத்தினரை தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த பெண்ணின் தந்தையை, ஒசகோட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்

இதுகுறித்து ஒசகோட்டை போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, விசாரணை நடத்தினர். மேலும், மோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story