துபாரே முகாமில் பராமரிக்கப்படும் யானை தாக்கி தொழிலாளி சாவு


துபாரே முகாமில் பராமரிக்கப்படும்  யானை தாக்கி தொழிலாளி சாவு
x

விராஜ்பேட்டை அருகே துபாரே முகாமில் பராமரிக்கப்படும் யானை தாக்கி தொழிலாளி பலியானார்.

குடகு: விராஜ்பேட்டை அருகே துபாரே முகாமில் பராமரிக்கப்படும் யானை தாக்கி தொழிலாளி பலியானார்.

துபாரே முகாம்

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகாவில் துபாரே யானைகள் முகாம் உள்ளது. தொடர் அட்டகாசம் செய்யும் யானைகளை பிடித்து துபாரே முகாமில் பராமரிக்கப்பட்டு அவைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இரவு நேரத்தில் யானைகள் வனப்பகுதியில் விடப்படுகிறது.

இந்த நிலையில் துபாரே யானைகள் முகாமையொட்டி ஹாடி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் பசப்பா(28), தொழிலாளி. இவர், நேற்று சொந்த வேலையாக வனப்பகுதியை ஒட்டி பகுதியில் சென்றுள்ளார்.

யானை தாக்கி சாவு

அப்போது துபாரே முகாமில் இருந்து இரவு வனப்பகுதியில் விடப்பட்ட நஞ்சுண்டா என்ற யானை, பசப்பாவை பார்த்ததும் தாக்க துரத்தியது. யானையை பார்த்ததும் பசப்பா தப்பிக்க ஓட்டம் பிடித்தார். ஆனாலும் யானை, அவரை துரத்தி தாக்கியது. இதில் பசப்பா பலத்த காயம் அடைந்தார். இதற்கிடையே நஞ்சுண்டா யானையை பாரமரித்து வந்த மாவ்தா சரத்த என்பவர் வந்தார். யானை தாக்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், பசப்பாவை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் யானை தாக்க முயன்றுள்ளது. ஆனால் அவர் தப்பியோடி உயிர் தப்பினார். இதற்கிடையே யானை அங்கிருந்து சென்றுள்ளது.

இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த பசப்பாவை மீட்டு சிகிச்சைக்காக சித்தாபுரா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி பசப்பா உயிரிழந்தார். பசப்பாவுக்கு திருமணம் முடிந்து மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.

நடவடிக்கை

இதற்கிடையே அப்பகுதி மக்கள், வனத்துறையினரிடம் யானைகள் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்ைக வைத்தனர். இதை ஏற்ற வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகவும், யானை தாக்கி உயிரிழந்த பசப்பாவின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.


Next Story