சிறுத்தையுடன் கட்டிப்புரண்டு சண்டையிட்ட தொழிலாளி


சிறுத்தையுடன் கட்டிப்புரண்டு சண்டையிட்ட தொழிலாளி
x

சிறுத்தையுடன் தொழிலாளி கட்டிப்புரண்டு சண்டையிட்டார்.

மண்டியா: மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா எச்.ஒசூரு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 55). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை வெளியே சென்றுவிட்டு வனப்பகுதி சாலை வழியாக வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை, ஜெகதீஷ் மீது பாய்ந்தது. இதில் மோட்டார் சைக்கிளுடன் நிலைதடுமாறி கீழே விழுந்த ஜெகதீசை சிறுத்தை தாக்கியது. உடனே அவரும் சிறுத்தையை திருப்பி தாக்கினார். சுமார் 15 நிமிடங்கள் ஜெகதீஷ் சிறுத்தையை கட்டிப்பிடித்து உருண்டபடி இருந்தார். இதற்கிடையே சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு வந்ததும், சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

சிறுத்தை தாக்கியதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்தார். இதனால் அவர் மத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. ஆனால் இதுவரை சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சிறுத்தையை உடனே பிடிக்க வேண்டும். மேலும் சிறுத்தை தாக்கி காயமடைந்த ஜெகதீசுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


Next Story