விவசாய அணியின் செயற்குழு கூட்டம்


விவசாய அணியின் செயற்குழு கூட்டம்
x

பெலகாவியில் பா.ஜனதா விவசாய அணியின் தேசிய செயற்குழு கூட்டத்தை எடியூரப்பா தொடங்கி வைத்தார்.

பெங்களூரு:-

போராடி வருகிறேன்

பா.ஜனதா கட்சியின் தேசிய விவசாய அணியின் செயற்குழு கூட்டம் தொடக்க விழா பெலகாவியில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு அந்த கூட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கர்நாடகத்தில் விவசாயிகளுக்காக நான் கடந்த 50 ஆண்டுகளாக போராடி வருகிறேன். வேளாண் பட்ஜெட்டை நான் தாக்கல் செய்தேன். விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தினேன். கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குகிறது. அத்துடன் ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்தை நான் தொடங்கினேன்.

பொருளாதார பலம்

கர்நாடகத்தில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. பா.ஜனதா எப்போதும் மக்களுக்கு ஆதரவான திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்தியா இன்று உலகின் 5-வது பெரிய பொருளாதார பலமிக்க நாடாக உருவெடுத்துள்ளது. இதன் பின்னணியில் பிரதமர் மோடியின் உழைப்பு உள்ளது. நாம் இன்னும் வேகமாக வளர வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

கூட்டத்தில் விவசாய அணியின் தேசிய தலைவர் ராஜ்குமார் சஹர் பேசுகையில், "இந்தியா உலகின் குருவாக வர வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி பாடுபட்டு வருகிறார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டி வருகிறோம். மத்திய-மாநில அரசுகளின் விவசாயிகளுக்கு ஆதரவான திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் பணியை நமது கட்சியினர் மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

இதில் பா.ஜனதாவின் தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story