உலக ஜூனியர் ஸ்நூக்கர் போட்டியில் தமிழ் பெண் சாம்பியன்
உலக ஜூனியர் ஸ்நூக்கர் போட்டியில் தமிழ் பெண் சாம்பியன் ஆனார்.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா தாசரஹொசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கீர்த்தனா. இவர் ரோமானியாவில் நடந்த 21-வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ஜூனியர் ஸ்நூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கீர்த்தனா, அதில் தாய்லாந்தைச் சேர்ந்த இளம்பெண்ணை எதிர்கொண்டார். முடிவில் கீர்த்தனா வெற்றிபெற்று சாம்பியன் ஆனார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கீர்த்தனாவின் தந்தை பெமல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
சாம்பியன் பட்டத்தை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த கீர்த்தனா இதேபோல் ஏராளமான நாடுகளுக்கு சென்று ஸ்நூக்கர் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பூர்வீகம் தமிழகம் என்பது நினைவுகூரத்தக்கது.
Related Tags :
Next Story