மல்யுத்த வீரர்களின் குரல் மிதிக்கப்படுகிறது - பிரியங்கா காந்தி சாடல்


மல்யுத்த வீரர்களின் குரல் மிதிக்கப்படுகிறது - பிரியங்கா காந்தி சாடல்
x

மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டதற்க்கு காங்கிரஸ் பொதுச்செயளாலர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லி,

மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்க்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் குற்றத்திற்க்காக அவரை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வருகின்றனர்.

இதனிடையே, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். நாடளுமன்ற திறப்பு விழாவன்று "மஹிளா மகாபஞ்சாயத்" என்ற பெயரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்த முடிவெடுத்தனர்.

ஆனால் போராட்டம் நடத்த அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில் தடையை மீறி மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தியதால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டதற்க்கு காங்கிரஸ் பொதுச்செயளாலர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரியங்கா காந்தி கூறுகையில், 'மல்யுத்த வீரர்களின் மார்பில் இருக்கும் பதக்கங்களால், நம் நாட்டிற்கு பெருமை ,அவர்களின் குரலை மத்திய அரசு இரக்கமில்லாமல் மிதித்து வருகிறது' என்று கூறியுள்ளார்.


Next Story