தேவேகவுடாவிடம் நோில் நலம் விசாரித்தார் எடியூரப்பா


தேவேகவுடாவிடம் நோில் நலம் விசாரித்தார் எடியூரப்பா
x

தேவேகவுடாவிடம் எடியூரப்பா நோில் சென்று நலம் விசாரித்தார்.

பெங்களூரு: முன்னாள் பிரதமரும், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா எம்.பி. வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள தனது வீட்டில் இருக்கிறார். அவர் கட்சி கூட்டங்களிலோ அல்லது பொது நிகழ்ச்சிகளிலோ கலந்துகொள்வது இல்லை.

இந்த நிலையில் அவரை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று முன்தினம் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான எடியூரப்பா நேற்று மாலை தேவேகவுடாவின் வீட்டிற்கு வந்தார். அங்கு தேவேகவுடாவிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்து நலம் விசாரித்தார். அப்போது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் உடன் இருந்தனர்.


Next Story