யஷ்வந்தபுரம்-டாடாநகர் வாராந்திர ரெயில் மீண்டும் இயக்கம்
யஷ்வந்தபுரம்-டாடாநகர் வாராந்திர ரெயில் மீண்டும் இயக்கப்படுகிறது.
பெங்களூரு: தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெங்களூரு யஷ்வந்தபுரம்-ஜார்கண்ட் மாநிலம் டாடாநகர் இடையே வாரந்தோறும் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த ரெயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் யஷ்வந்தபுரம்-டாடா நகர் இடையேயான வாரந்திர ரெயில்களை மீண்டும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வாரத்தில் வியாழக்கிழமைதோறும் டாடாநகரில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்படும் ரெயில் சனிக்கிழமை மதியம் 1.40 மணிக்கும் பெங்களூரு யஷ்வந்தபுரத்தை வந்து சேரும். மறுமார்க்கமாக யஷ்வந்தபுரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12.30 மணிக்கு புறப்படும் ரெயில் செவ்வாய்க்கிழமை காலை 9.20 மணிக்கு சென்றடையும் என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story