உனக்கு 28...எனக்கு 61...முதியவருடன் இளம்பெண்ணுக்கு டும் டும் டும்... சமூக வலைதளங்களில் வைரல்..!
புதுச்சேரியில் 61 வயதான முதியவர் ஒருவருக்கும் 28 வயது பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
புதுச்சேரி,
புதுச்சேரியை சேர்ந்த முதியவர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். 61 வயதான இவர் தனது உறவினர்களை காண புதுச்சேரிக்கு வந்துள்ளார். அப்போது தனது மனைவி இறந்ததால் தனிமையில் வாடுவதாகவும், குடும்ப பொறுப்புகளை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக புலம்பியுள்ளார். இதை பார்த்த உறவினர்கள் அப்பகுதியை சேர்ந்த கணவரை இழந்த 28 வயதான இளம் பெண்ணிடம் இது தொடர்பாக எடுத்துக் கோரி முதியவரை திருமணம் செய்து கொள்ளும்படி தெரிவித்துள்ளனர். முதியவரை திருமணம் செய்ய அந்த பெண்ணும் சம்மதித்து பிரான்ஸ் நாட்டிற்கு செல்லவும் சம்மதித்தாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை வீடியோவாக எடுத்த சில நபர்கள் அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
இது தொடர்பாக அந்த கோவிலின் அறங்காவல் குழுவினர் தரப்பில் கூறும்போது, இருவரின் பெயர், எந்த ஊர் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. அவர்கள் மேஜரா என்பதை மட்டும் நாங்கள் பார்த்தோம். மேலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள எம்எல்ஏ ஒருவரின் சிபாரிசு கடிதமும் பெற்று வந்தனர்.
இதனை ஏற்றுக்கொண்டு நாங்கள் திருமணம் செய்து வைத்தோம். மணப்பெண்ணுக்கு 28 வயதாகின்றது மணமகனுக்கு 61 வயதாகின்றது. இந்த தகவல் மட்டுமே தங்களுக்கு தெரியும் என்று தெரிவித்தார். அந்த பெண் முதியவரை திருமணம் செய்து கொண்டு பிரான்ஸ் நாட்டில் செட்டில் ஆகலாம் என்பதற்காக அவரை திருமணம் செய்து கொண்டிருக்கலாம் என்று பலரும் தெரிவித்து கூறி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் அந்த பெண்ணின் குடும்பத்திற்கு 2.5 கோடி ரூபாய் முதியவர் தரப்பிலிருந்து வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.