நூதன முறையில் பணம் திருடிய வாலிபர் கைது


நூதன முறையில் பணம் திருடிய வாலிபர் கைது
x

பெங்களூருவில், நூதன முறையில் பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு:

பெங்களூரு கிழக்கு மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு நபா் வசித்து வருகிறார். அவரது வங்கி கணக்கில் இருந்து கடந்த மே மாதம் 8-ந் தேதியில் இருந்து 14-ந் தேதி வரை ரூ.3 லட்சம் எடுக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் மண்டியா மாவட்டம் குன்னா நாயக்கனஹள்ளியை சேர்ந்த பிரகாஷ் (வயது 31) என்று தெரிந்தது. இவர், பெங்களூருவில் பஸ் நிறுத்தங்கள், பொதுஇடங்களில் நிற்கும் நபர்களிடம் தனது குடும்பத்தினரிடம் பேச வேண்டும் என்று கூறி, செல்போனை வாங்கி அதில் இருந்து சிம்கார்டை திருடுவார்.

பின்னர், அந்த சிம்கார் மூலம் அந்த நபரின் வங்கி விவரங்களை ெபற்று பணத்தை திருடி வந்துள்ளார். இந்த நூதன திருட்டில் பிரகாஷ் கைதேர்ந்தவராக செயல்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story