பெண் பிரமுகருக்கு மனவேதனை ஏற்படுத்தியதாக வழக்குஇளைஞர் காங். தலைவரை கைது செய்ய இடைக்கால தடைசுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


பெண் பிரமுகருக்கு மனவேதனை ஏற்படுத்தியதாக வழக்குஇளைஞர் காங். தலைவரை கைது செய்ய இடைக்கால தடைசுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

அசாம் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவியாக இருந்து நீக்கப்பட்ட அங்கிதா தத்தா என்ற பெண் பிரமுகர், குற்றம் சாட்டினார்.

புதுடெல்லி,

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி.சீனிவாஸ். இவர் தனக்கு மன வேதனை ஏற்படுத்தியதாக அசாம் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவியாக இருந்து நீக்கப்பட்ட அங்கிதா தத்தா என்ற பெண் பிரமுகர், குற்றம் சாட்டினார். அதன்பேரில், பி.வி.சீனிவாஸ் மீது அசாம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அவ்வழக்கில் தனக்கு முன்ஜாமீன் அளிக்கக்கோரி, கவுகாத்தி ஐகோர்ட்டில் சீனிவாஸ் மனு தாக்கல் செய்தார். ஆனால் அம்மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சீனிவாஸ் மேல்முறையீடு செய்தார். அந்த மனு, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

சீனிவாசை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதே சமயத்தில், விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு சீனிவாசிடம் கூறிய அவர்கள், 22-ந்தேதி போலீஸ் முன்பு ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.


Next Story