போலி ஆவணங்கள் மூலம் 'சிட்கோ'விடம் ரூ.60 கோடி மோசடி
போலி ஆவணங்கள் மூலம் ‘சிட்கோ’விடம் ரூ.60 கோடி மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
நவிமும்பை,
நவிமும்பை கார்கர் பெல்பாடாவை சேர்ந்தவர் சிரிஷ் காரட் (வயது64). இவர் தனக்கு சொந்தமான 2 ஆயிரத்து 500 சதுர மீட்டர் நிலத்தை கடந்த 2022-ம் ஆண்டு ரியல் எஸ்டேட் அதிபர்கள் 2 பேரிடம் ரூ.7 கோடிக்கு விற்றார். இதற்கான முன்தொகையை (ரூ.1 கோடியே 98 லட்சம்) அவர் பெற்று கொண்டு நிலத்தின் உரிமையை அவர்களுக்கு மாற்றி கொடுத்தார். இதற்கிடையே அந்த நிலம் தன்னுடையது தான் என்பதற்கான போலி ஆவணங்களை சிட்கோவிடம் தாக்கல் செய்து நிலம் எக்கேஞ்ச் அடிப்படையில் சிட்கோவிடம் இருந்து மற்றொரு நிலத்தை பெற்று மோசடி செய்தார். இதில் அவர் ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் சிட்கோவிடம் ரூ.60 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இது பற்றி சி.பி.டி பேலாப்பூர் போலீசார் சிரிஷ் காரட் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story