பால்கர் மாவட்டத்தில் நிலநடுக்கம்; மும்பையில் இருந்து 78 கி.மீ. தொலைவில் அதிர்ந்தது


பால்கர் மாவட்டத்தில் நிலநடுக்கம்; மும்பையில் இருந்து 78 கி.மீ. தொலைவில் அதிர்ந்தது
x
தினத்தந்தி 23 Sept 2023 1:30 AM IST (Updated: 23 Sept 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

பால்கர் மாவட்டத்தில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மும்பையில் இருந்து 78 கி.மீ. தொலைவில் அதிர்வு ஏற்பட்டது.

மும்பை,

பால்கர் மாவட்டத்தில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மும்பையில் இருந்து 78 கி.மீ. தொலைவில் அதிர்வு ஏற்பட்டது.

நிலநடுக்கம்

பால்கர் மாவட்டம் தகானு கடற்கரை பகுதியில் நேற்று மாலை 5.19 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பீதி அடைந்து வீட்டை, விட்டு வெளியே ஓடிவந்தனர். தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட தகவலில், பால்கர் கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு பதிவானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மும்பையில் இருந்து வட மேற்கில் 78 கி.மீ. தொலைவில் இருந்த நில அதிர்வு ஏற்பட்டு உள்ளது.

3.8 ரிக்டர்

ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 3.8 ஆக பதிவானது. இருப்பினும் நிலநடுக்கம் காரணமாக எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என பால்கர் மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு தலைவர் விவேகானந்த கதம் தெரிவித்தார். நில நடுக்க முழுமையான விவரங்கள் இன்னும் வரவில்லை என்று தகானு தாலுகாக தாசில்தார் அபிஜித் தேஷ்முக் தெரிவித்தார். பால்கர் மாவட்டத்தில் அடிக்கடி நில அதிர்வு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story