சொந்த குடும்பத்தை புறக்கணித்தவர் அடுத்தவர்களின் குடும்பம் பற்றி பேசக்கூடாது - பிரதமர் மோடி மீது உத்தவ் தாக்கரே தாக்கு

சொந்த குடும்பத்தை புறக்கணித்தவர், அடுத்தவர்களின் குடும்பம் பற்றி பேசக்கூடாது என பிரதமர் மோடியை உத்தவ் தாக்கரே தாக்கி பேசினார்.
மும்பை,
சொந்த குடும்பத்தை புறக்கணித்தவர், அடுத்தவர்களின் குடும்பம் பற்றி பேசக்கூடாது என பிரதமர் மோடியை உத்தவ் தாக்கரே தாக்கி பேசினார்.
சொந்த குடும்பத்தை புறக்கணித்தவர்
மும்பையில் 'இந்தியா' கூட்டணி கூட்டம் கடந்த மாதம் 31 மற்றும் கடந்த 1-ந் தேதிகளில் நடந்தது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியை விமர்சித்த பிரதமர் மோடி, நாடு வாரிசு அரசியல், ஊழலை ஒழிக்க விரும்புகிறது என கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் மோடியை பெயரை குறிப்பிடாமல் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்து உள்ளார். அவர் தனது சொந்த குடும்பத்தையே புறக்கணித்தவர்கள், அடுத்தவர்களின் குடும்பங்களை பற்றி பேசக் கூடாது என கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-
ஜெயிலுக்கு போகும் நேரம் வரும்
குடும்ப அமைப்பு, குடும்ப உறவு இந்துக்களின் கலாசாரம். உங்கள் குடும்பத்தை முதலில் கவனியுங்கள். அதன்பிறகு எங்களின் குடும்பம் பற்றி பேசுங்கள். கிஷோரி பெட்னேக்கர், அனில் பரப், சஞ்சய் ராவத் போன்ற சிவசேனாவினர் துன்புறுத்தப்படுகின்றனர். எங்கள் (பா.ஜனதா) கட்சியில் சேரவில்லை எனில், ஜெயிலுக்கு போக நேரிடும் என மிரட்டுகின்றனர். நீங்களும் (பா.ஜனதா) ஜெயிலுக்கு போக வேண்டிய நேரம் வரும். வாழ்நாள் முழுவதும் பா.ஜனதாவுக்கு பல்லக்கு தூக்க பால்தாக்கரே கட்சி தொடங்கவில்லை. சர்வாதிகார பா.ஜனதா ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம். இவ்வாறு அவா் கூறினார்.