இந்திய பயிற்சியாளர்களுக்கான சம்பள உச்சவரம்பு நீக்கம் மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவிப்பு
இந்திய பயிற்சியாளர்களுக்கான சம்பள உச்சவரம்பை நீக்கம் செய்து மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கும் இந்திய பயிற்சியாளர்களுக்கு ஒரு மாதத்துக்கான சம்பள உச்சவரம்பை ரூ.2 லட்சமாக மத்திய விளையாட்டு அமைச்சகம் நிர்ணயித்து இருந்தது. இந்த சம்பள உச்சவரம்பை மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று நீக்கி இருக்கிறது. இது குறித்து மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘பல இந்திய பயிற்சியாளர்கள் மிகவும் சிறப்பான முடிவை கொடுத்து வருகிறார்கள். அவர்களது கடின உழைப்புக்கு உரிய வெகுமதி அளிக்க வேண்டியது அவசியமானதாகும். உயர் மட்ட போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு நாடு முழுவதும் உள்ள சிறந்த பயிற்சியாளர்களை கவர வேண்டும் என்பதில் அரசு ஆர்வமாக இருக்கிறது. சிறந்த பயிற்சியாளர்கள் பயிற்சி பணியில் இணைய சம்பள உச்சவரம்பினால் ஏற்படும் இழப்பு தடையாக இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. சம்பள உயர்வு, ஒப்பந்த காலம் நீட்டிப்பு ஆகிய சலுகைகள் முன்னாள் சிறந்த வீரர்களை உயர்மட்ட வீரர்களுக்கான பயிற்சியின் பக்கம் இழுக்கும். அவர்களின் அனுபவம் மற்றும் திறமையை பெரிய போட்டிகளுக்கு வீரர்கள் நன்றாக தயாராக பயன்படுத்தி கொள்ள முடியும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘உள்ளூர் பயிற்சியாளர்களுக்கான சம்பள உச்சவரம்பை நீக்கி இருப்பது பாராட்டுக்குரியது. இதனை இந்திய ஒலிம்பிக் சங்கமும், தேசிய விளையாட்டு சம்மேளனங்களும் முழுமனதுடன் வரவேற்கிறது’ என்று இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா கூறியுள்ளார்.

Related Tags :
Next Story