புதுவையில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை


புதுவையில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை
x
தினத்தந்தி 14 March 2022 11:50 PM IST (Updated: 14 March 2022 11:50 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16 ஆக குறைந்தது.

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 43 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் ஒருவருக்கு கூட தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. தற்போது 16 பேர் மட்டும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். இன்று ஒருவர் குணமடைந்தார்.
நேற்று முதல் தவணை தடுப்பூசியை 22 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 139 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 7 பேரும் போட்டுக்கொண்டனர்.

1 More update

Next Story