கொலம்பஸ்


கொலம்பஸ்
x
கொலம்பஸ்
தினத்தந்தி 3 Feb 2020 7:28 AM GMT (Updated: 3 Feb 2020 7:28 AM GMT)

இந்த வாரம் கேள்வி ஞானம் பகுதியில் உலகப் புகழ்பெற்ற கடற்பயண ஆய்வாளர் கொலம்பஸ் பற்றி அறியலாம்...

கொலம்பஸ் என்பவர் யார்?
இத்தாலியைச் சேர்ந்த புகழ்பெற்ற கடற்பயணி கொலம்பஸ். இவர் 1492-ல் அமெரிக்க நிலப்பரப்பை கண்டுபிடித்து பெரும்புகழ் பெற்றார்.

அவர் எங்கு பிறந்தார்?
கொலம்பஸ் ஜெனோவா என்ற இடத்தில் பிறந்தார். அவரது அனைத்து கடல் பயணங்களும் ஸ்பெயின் ராணி இசபெல்லா மற்றும் அவரது கணவர் ராஜா பெர்டினான்ட் ஆகியோரால் ஆதரிக்கப்பட்டது. ராஜ குடும்பத்தின் கட்டளைக்கேற்ப அவர் புதிய நிலப்பரப்புகளை தேடி ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.

கொலம்பஸ் புதிய நில இந்தியர்கள் என்று யாரை அழைத்தார்?
கொலம்பஸ், இந்தியாவுக்கு சென்றடையும் புதிய கடல் வழியை கண்டுபிடிக்கும் நோக்கத்துடன்தான் பயணம் மேற்கொண்டார். அவர் ஒரு நிலப்பரப்பை சென்றடைந்துவிட்டு அது இந்தியா என்றும், அங்குள்ளவர்களை இந்தியர்கள் என்றும் குறிப்பிட்டு அழைத்தார். அப்போது அவர் சென்றடைந்த நிலப்பரப்பு அமெரிக்கா ஆகும். அங்கு வசித்த பழங்குடியினர், இன்றும் செவ்விந்தியர்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள்.

கொலம்பஸ் எந்த கப்பல்களில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்?
சான்டா மரியா அவர் தலைமை தாங்கி பயணித்த கப்பலாகும். அதனுடன் பின்டா மற்றும் நினா என்று அழைக்கப்படும் இரு சிறிய கப்பல்களும் பயணித்தன.

அமெரிக்காவை மட்டும்தான் கொலம்பஸ் கண்டுபிடித்தாரா?
கொலம்பஸ் தனது கடற்பயணத்தில் பல்வேறு நிலப்பரப்புகளை கண்டுபிடித்துள்ளார். கியூபா, ஹிஸ்பேனியோலா (இதுதான் தற்போது ஹைதி தீவு மற்றும் டொமினிக் குடியரசு என அழைக்கப்படுகிறது), விர்ஜின் தீவுகள், போர்டோ ரிகோ, ஜமைக்கா, டிரினிடாட் ஆகியவையும் கொலம்பஸ் கண்டுபிடித்த நிலப்பரப்புகளே.

அமெரிக்கா வளர்ச்சி கண்ட நாடாக விளங்குவதால், கொலம்பஸின் கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்கதாக அமெரிக்கா குறிப்பிடப்படுகிறது.

Next Story