தொழில் பாதுகாப்பு படையில் வேலை


தொழில் பாதுகாப்பு படையில் வேலை
x
தினத்தந்தி 6 Feb 2022 2:58 PM IST (Updated: 6 Feb 2022 2:58 PM IST)
t-max-icont-min-icon

மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் (சி.ஐ.எஸ்.எப்) கான்ஸ்டபிள், தீயணைப்பு வீரர் என 1149 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 4-3-2022 அன்றைய தேதிப்படி 18 முதல் 23 வயதுக்குட்பட்ட ஆண்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அதாவது விண்ணப்பதாரர்கள் 5-3-1999-க்கு முன்பாகவும், 4-3-2004-க்கு பின்பாகவும் பிறந்திருக்கக்கூடாது.

அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். ஆவண சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் சி.எஸ்.ஐ.எப். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.cisfrectt.in) சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில், புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி 4-3-2022. மேலும் விரிவான விவரங்களை சி.ஐ.எஸ்.எப். இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
1 More update

Next Story