100 கோடி சூரியனின் ஆற்றலை வெளிப்படுத்தும் நட்சத்திரம் வெடித்து சிதறியது..!


100 கோடி சூரியனின் ஆற்றலை வெளிப்படுத்தும் நட்சத்திரம் வெடித்து சிதறியது..!
x
தினத்தந்தி 6 Jan 2022 10:44 AM GMT (Updated: 6 Jan 2022 10:44 AM GMT)

3.5 வினாடிகளில் நூறு கோடி சூரியனின் ஆற்றலை வெளிப்படுத்தும் நட்சத்திரம் வெடித்த தகவலை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

வாஷிங்டன்,

பிரபஞ்சத்தில் இருக்கும் அதிசயங்களில் ஒன்று சூரியன். அது ஒரு மிகப்பெரிய நட்சத்திரம் ஆகும். அது தன்னுள் இருக்கும் அணுசேர்க்கை வேதியியல் மாற்றத்தால் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. அதன் காரணமாக சூரிய குடும்பத்தில் உள்ள பூமி போன்ற பிற கோள்கள் வெளிச்சத்தையும் வெப்பத்தையும் பெற்று வருகின்றன என்பது எல்லோரும் நன்கு அறிந்த விஷயமே.

இந்த நிலையில், சூரியனை விட பன்மடங்கு சக்தி வாய்ந்த நட்சத்திரம் வெடிக்க தொடங்கியுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 1 கோடியே 30 லட்சம் ஒளி ஆண்டு தொலைவில் இருக்கும் அந்த நட்சத்திரம் சமீபத்தில் வெடித்தது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள ‘ஏ.ஐ.எம்’ கருவியைப் பயன்படுத்தி இந்த அரிய நிகழ்வு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தொழில்நுட்பம் மூலம் இந்த நட்சத்திரத்தின்  வெடிப்பின் தீவிரம் மற்றும் கால அளவை பதிவு செய்ய முடிந்தது.

ஒரு செயலற்ற நிலையில் கூட, இந்த நட்சத்திரம்  நமது சூரியனை விட நூறாயிரம் மடங்கு பிரகாசமாக இருக்கும். 1 லட்சம் ஆண்டுகளில் நமது சூரியனால் வெளிப்படும் ஆற்றலை இந்த நட்சத்திரம் வெளிப்படுத்துகிறது.

இந்த வெடிப்புக்கு என்ன காரணம் என்று ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் சரியாகத் தெரியவில்லை. நட்சத்திரத்தில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம். அந்த நட்சத்திரம் பிரபஞ்சத்தில் இருப்பதை  நமக்கு சுட்டிக்காட்ட விரும்பி இந்த நிகழ்வு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று இது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஆய்வின் முதன்மை ஆய்வாளர், ஆல்பர்டோ ஜே. காஸ்ட்ரோ-டிராடோ தெரிவித்துள்ளார். 

Next Story