இன்று மின்சாரம் நிறுத்தம்
Power outage today
ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓசூர் ஜூஜூவாடி, பேகேப்பள்ளி மற்றும் கெம்பட்டி துணை மின் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஜூஜுவாடி, மூக்கண்டப்பள்ளி, பேகேப்பள்ளி, பேடரப்பள்ளி, தர்கா, அரசனட்டி, பாரதி நகர், சிப்காட் ஹவுசிங் காலனி, சின்ன எலசகிரி, சிட்கோ பகுதி-1, சூர்யா நகர், காமராஜ் நகர், எம்.ஜி.ஆர். நகர், எழில் நகர், ராஜேஸ்வரி லேஅவுட், சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் கெம்பட்டி, கப்பக்கல், பேளகொண்டபள்ளி, மதகொண்டபள்ளி, பூனப்பள்ளி, நாகொண்டபள்ளி, கோபனபள்ளி, பாரந்தூர், எஸ்.முதுகானபள்ளி, பி.ஆர்.தொட்டி, அன்னியாளம், செட்டிப்பள்ளி, அகலக்கோட்டை, கல்லுபாலம், கூலிசந்திரம், பின்னமங்கலம், மானுப்பள்ளி, ஜவளகிரி, உனிசநத்தம், கக்கதாசம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.