பவானியில் நண்பரை பாட்டிலால் குத்தியவர் கைது


பவானியில் நண்பரை பாட்டிலால் குத்தியவர் கைது
x

பவானியில் நண்பரை பாட்டிலால் குத்தியவர் கைது

ஈரோடு

பவானி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள தட்டாங்கொட்டை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 40). அதே பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (45). நண்பர்களான இவர்கள் 2 பேருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 2 பேரும் ஈரோடு மாவட்டம் பவானி வந்துள்ளனர். அப்போது வடிவேல் மது அருந்திவிட்டு பெரியசாமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஆத்திரம் அடைந்த வடிவேலு தன்னுடைய இடுப்பில் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து பெரியசாமியை குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலுவை கைது செய்தனர்.


Next Story