புகார் பெட்டி
புகார் பெட்டி
ெசடிகள் அகற்றப்பட்டது
கொட்டாரம் பேரூராட்சி அலுவலகத்தின் பின்புறம் சித்திவிநாயகர் கோவிலின் மேற்கு பகுதியில் ஒரு கழிவுநீர் ஓடை உள்ளது. இந்த ஓடையில் செடி, கொடிகள் வளர்ந்து கழிவுநீர் வடிந்தோட வழியில்லாத நிலை இருந்தது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார்பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஓடையில் வளர்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட 'தினத்தந்தி'-க்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
சேதமடைந்த மின்கம்பம்
அஞ்சுகிராமம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பரப்புவிளையில் சாலையோரம் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நீலகண்ணன். வடக்கு பகவதிபுரம்.
விபத்து அபாயம்
கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் அச்சங்குளம் பகுதியில் உயரமான நாவல் மரங்கள் உள்ளன. இந்த மரங்களின் கிளைகள் அடிக்கடி முறிந்து கீழே விழுகின்றன. இதனால் முன்பு ஒருவர் பலியாகி உள்ளார். எனவே தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலையின் குறுக்காக உள்ள நாவல் மர கிளைகளை வெட்டி அகற்றி விபத்து அபாயத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சி.ராம்தாஸ், சந்தையடி.
பஸ்சை தொடர்ந்து இயக்க வேண்டும்
தக்கலையில் இருந்து நாகர்கோவிலுக்கு 12 'ஜே' அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இரணியில் சந்திப்பு, நெட்டாங்கோடு, ராஜாக்கமங்கலம் வழியாக இயக்கப்பட்ட இந்த பஸ்சால் கோணம் தொழிற்பயிற்சி கல்லூரி மாணவிகள், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் பயன்பெற்று வந்தனர். தற்போது இந்த பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவ-மாணவிகள்,நோயாளிகள் ெதாழிலாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி நிறுத்தப்பட்ட வழித்தடத்தில் 12'ஜே' பஸ்சை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரவிகுமார், மொட்டவிளை.
நடவடிக்கை தேவை
நாகர்கோவில் கோட்டார் சவேரியார் ஆலய சந்திப்பு பகுதி எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த சந்திப்பு பகுதியில் சாலையோரத்தில் மின்கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் சீராக எரிவதில்லை. இதனால், நள்ளிரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பழுதடைந்த மின்விளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகளை அமைத்து சீராக எரியவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவசுப்பிரமணியம், கோட்டார்.
எரியாத மின்விளக்கு
விழுந்தயம்பலம் கல்நாட்டி பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியின் அருகில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் பொருத்தப்பட்டள்ள மின்விளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் அந்த வழியாக இரவு நேரம் செல்லும் பெண்கள் அச்சத்துடனேேய கடந்து செல்கின்றனர். எனவே பழுதடைந்த மின்விளக்குகளை அகற்றி விட்டு புதிய மின்விளக்குகளை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தங்கவேல், விழுந்தயம்பலம்.
சீரமைக்கப்படுமா?
நெட்டாங்கோடு பஞ்சாயத்தில் அக்கிராமணம் குளம் உள்ளது. இந்த குளத்தின் பக்கவாட்டுச்சுவர் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே குளத்தின் பக்கவாட்டுச்சுவரை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-மணிகண்டன், நெட்டாங்கோடு.