கரூர் நகரப்பகுதியில் நாளை மின்நிறுத்தம்


கரூர் நகரப்பகுதியில் நாளை மின்நிறுத்தம்
x

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கரூர் நகரப்பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

கரூர்,

மின்சாரம் நிறுத்தம்

கரூர் துணைமின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் காமராஜபுரம், கே.வி.பி.நகர், செங்குந்தபுரம், பெரியார்நகர், ஜவகர்பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்திநகர், ரத்தினம் சாலை, கோவை ரோடு, வடிவேல்நகர், ராமானுஜம்நகர், திருக்காம்புலியூர், ஆண்டாங்கோவில்ரோடு, செல்லாண்டிபாளையம், சுக்காலியூர், சேலம்-புறவழிச்சாலை, ஆண்டாங்கோவில் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

ஜவகர் பஜார்

இதேபோல் கரூர் துணைமின் நிலையத்திற்குட்பட்ட ஜி.எச். பீடர், ஈஸ்வரன் கோவில் பீடர், ராமகிருஷ்ணபுரம் பீடர், ஜவகர்பஜார் பீடர், லைட்ஹவுஸ் பீடர், சுக்காலியூர் பீடர், மண்மங்கலம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட சிட்கோ 1 - 2 பீடர், குப்புச்சிபாளையம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட என்.புதூர் பீடர், தாந்தோணிமலை துணைமின் நிலையத்திற்குட்பட்ட சாரதா காலேஜ் பீடர் ஆகிய பீடர்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ராமகிருஷ்ணபுரம், சின்னாண்டாங்கோவில் ரோடு, லைட்ஹவுஸ், கவுரிபுரம், பஸ் நிலையம், 80 அடி ரோடு, திருமாநிலையூர், கோவை ரோடு, நீலிமேடு, காமாட்சியம்மன் கோவில், மக்கள் பாதை, சிட்கோ பகுதிகள் அனைத்தும், வாங்கல், பசுபதிபாளையம், சிந்தாயூர், நன்னியூர், என்.புதூர், செவ்வந்திபாளையம், கோடங்கிப்பட்டி, வெடிகாரன்பட்டி, பாகநத்தம், நல்லகாளிப்பட்டி, செல்லாண்டிபாளையம், அப்பிபாளையம், சுக்காலியூர், கருப்பம்பாளையம், செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மலைக்கோவிலூர்

இதேபோல மலைக்கோவிலூர் துணைமின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் மலைக்கோவிலூர், செல்லிபாளையம், கனகாபுரி, கேத்தம்பட்டி, கோவிலூர், சின்னகரியம்பட்டி, பெரியகரியம்பட்டி, செண்பகனம், வரிக்காப்பட்டி, மாதுரெட்டிபட்டி, மூலப்பட்டி, நல்லகுமாரன்பட்டி, நாகம்பள்ளி, கே.வெங்கடாபுரம், என்.வெங்கடாபுரம், நந்தனூர், நச்சிபாளையம், வடுகபட்டி, தடாகோவில் கொத்தபாளையம், முத்துகவுண்டன்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் கிராமியம் மின்வாரிய செயற்பொறியாளர் மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story