குருபரப்பள்ளி அருகே வாகனம் மோதி ஒருவர் சாவு


குருபரப்பள்ளி அருகே  வாகனம் மோதி ஒருவர் சாவு
x

குருபரப்பள்ளி அருகே வாகனம் மோதி ஒருவர் இறந்தார்.

கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளி:

குருபரப்பள்ளி அடுத்த பந்தாரப்பள்ளியில் 50 வயது மதிக்கத்தக்க நபர் சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் அவர் மீது மோதி விட்டு சென்று விட்டது. இதில், படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் யார்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து போலுப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story