புதிய மின்மாற்றி திறப்பு
குத்தாலம் அருகே புதிய மின்மாற்றி திறக்கப்பட்டது
மயிலாடுதுறை
குத்தாலம்
குத்தாலம் ஒன்றியம், கோடிமங்கலம் ஊராட்சியில் ரூ.7.2 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விஜயா ராஜேந்திரன் தலைமை தாங்கினார். குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை.சங்கர் முன்னிலை வகித்தார். இதில், நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய மின்மாற்றியை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்தார். அப்போது மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. பொருளாளர் ரவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஸ்ரீதர், ஒன்றிய குழு உறுப்பினர் சிவஞானசுந்தரிபாலு மற்றும் மின்வாரிய அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.Related Tags :
Next Story