முதுகுளத்தூர், ஆனந்தூர் பகுதியில் இன்று மின்தடை


முதுகுளத்தூர், ஆனந்தூர் பகுதியில் இன்று மின்தடை
x

முதுகுளத்தூர், ஆனந்தூர் பகுதியில் இன்று மின்தடை

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்

ஆனந்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கூடலூர், காவனக்கோட்டை, கொக்கூரனி, கோவிந்தமங்கலம், சூரியன்கோட்டை, பனிக்கோட்டை, நத்தக்கோட்டை, புதுக்குறிச்சி, புத்தூர், ஓடக்கரை, தூவார், ஆய்ங்குடி, சிறுநாகுடி, பூவாணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று(வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என திருவாடானை மின்வாரியத் துறை உதவி செயற்பொறியாளர்(பொ) நிஷாக்ராஜா தெரிவித்துள்ளார்.

முதுகுளத்தூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று கீழத்தூவல், மேலத்தூவல், கே.ஆர்.பட்டிணம், ஏ.நெடுங்குளம் பகுதிகளிலும், கடலாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பொதிகுளம், யாதவர் குடியிருப்பு பகுதிகள்,

வாலிநோக்கம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சிக்கல் மின் பாதையில் மேலக்கிடாரம், காவாகுளம், சாயல்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஒப்பிடலாம், மாரியூர் மேலமுந்தல், கீழமுந்தல் ஆகிய பகுதியில் காலை 10மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை முதுகுளத்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்தார்.


Next Story