திருக்கோவிலூரில் பலத்த மழை
திருக்கோவிலூரில் பலத்த மழை பெய்தது.
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மழை பெய்த நிலையில், நேற்றும் தொடர்ந்து 2-வது நாளாக மழை பெய்தது. அதன்படி நேற்று மாலை 5 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை, சிறிது நேரத்துக்கு கனமழையாக கொட்டியது. இதன் காரணமாக தாழ்வான பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதற்கிடையே சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு இருப்பதாலும், திருக்கோவிலூர் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாகவும் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் திருக்கோவிலூர் தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும் வசந்த கிருஷ்ணாபுரம் துரிஞ்சலாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் அந்த பகுதியிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story