மின்கம்பத்தில் கார் மோதி வாலிபர் பலி


மின்கம்பத்தில் கார் மோதி வாலிபர் பலி
x

வேதாரண்யத்தில் மின்கம்பத்தில் கார் மோதி வாலிபர் பலியானார்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் மின்கம்பத்தில் கார் மோதி வாலிபர் பலியானார்.

மின்கம்பத்தில் மோதியது

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த செம்போடையை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது36). இவர் கார் வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வந்தார். இவருக்கு மாலா என்ற மனைவியும், 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு விஜயகுமார் செம்போடையில் இருந்து நாகைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரை விஜயகுமார் ஓட்டி சென்றார்.

வேட்டைகாரனிருப்பு அருகே சென்ற போது அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் அமைக்க பயன்படுத்தும் சிமெண்டு குழாயில் கார் மோதியது. பின்னர் அந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியது.

போலீசார் விசாரணை

இதில் படுகாயம் அடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவசேனாதிபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விஜயகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story